மும்பையில் அம்பேத்கர் இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதால் பரபரப்பு; உடனடி விசாரணைக்கு உத்தரவு

Photo of author

By Jayachandiran

மும்பையில் அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த ராஜ்க்ருஹா இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திடீரென நடத்தப்பட்ட இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

 

மும்பை தாதர் பகுதியில் அம்பேத்கர் வசித்து வந்த இல்லம் தாக்குதலுக்கு உண்டானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் கீழ் தளத்தில் அம்பேத்கர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் அம்பேத்கர் பயன்படுத்திய நூல்கள், பொருட்கள் ஆகியவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு தளத்தில் அம்பேத்கர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அம்பேத்கர் இல்லத்தில் புகுந்த தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அங்கு பார்வைக்காக வைத்திருந்த பூந்தொட்டிகள் சேதமாகின. இதையறிந்த பலர் அவரது இல்லத்தின் முன்பு திரண்டுள்ளனர். அம்பேத்கர் ஆதரவாளர்கள் மற்றும் பலர் குவிந்து வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை கைது செய்யுமாறு மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.