தமிழிசை வீட்டிற்கு திடீரென்று வந்த ஆம்புலன்ஸ்! பரபரப்பாக காணப்படும் பகுதி!  

Photo of author

By Rupa

தமிழிசை வீட்டிற்கு திடீரென்று வந்த ஆம்புலன்ஸ்! பரபரப்பாக காணப்படும் பகுதி!  

Rupa

Updated on:

Ambulance arrives at Tamil Music house Exciting looking area!

தமிழிசை வீட்டிற்கு திடீரென்று வந்த ஆம்புலன்ஸ்! பரபரப்பாக காணப்படும் பகுதி!

தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்த். இவருடைய மகள் தான் தமிழிசை சௌந்தர்ராஜன். மற்றும் இவரது கணவர் சௌந்தர்ராஜன். கணவர் மற்றும் மனைவி இருவரும் மருத்துவர்கள். இவர்கள் முதலில் சென்னையில் வசித்து வந்தனர். தற்பொழுது தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்துள்ளார். அதுமட்டுமின்றி புதுச்சேரி மாநிலத்தின் துணை ஆளுநராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் பொங்கல் பண்டிகையை தன் குடும்பத்தினருடன் கொண்டாட சென்னையில் இருக்கும் வீட்டிற்கு வந்துள்ளார். இன்று காலையில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக அவர்களின் வீட்டின் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் தமிழிசை சௌந்தராஜன் வீட்டின் முன் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு மூதாட்டி திடீரென்று மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த தமிழிசை சௌந்தர்ராஜன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைப்பு விடுத்தார்.

உடனடியாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வீட்டின் முன்பு ஆம்புலன்ஸ் வந்தது. மேலும் தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவர் என்பதால் அந்த மூதாட்டிக்கு ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளித்தார். பின்பு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அம்மூதாட்டியை அனுமதித்தார். தமிழிசையின் இந்த செயலுக்கு பல பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆம்புலன்ஸ் அழைப்பு விடுத்து அவற்றில் ஏற்றுக் விடாமல் மூதாட்டிக்கு தானே சிகிச்சை கொடுத்ததால் பலரும் நெகிழ்ச்சியுடன் நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் வீட்டின் முன் திடீரென்று ஆம்புலன்ஸ் வந்து நின்றதால் அப்பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டது.