படப்பிடிப்பு தளத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ்!! பிச்சைக்காரன் கதாநாயகனுக்கு ஏற்பட்ட திடீர் விபத்து!!

Photo of author

By Rupa

படப்பிடிப்பு தளத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ்!! பிச்சைக்காரன் கதாநாயகனுக்கு ஏற்பட்ட திடீர் விபத்து!!

Rupa

படப்பிடிப்பு தளத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ்!! பிச்சைக்காரன் கதாநாயகனுக்கு ஏற்பட்ட திடீர் விபத்து!!

விஜய் ஆண்டனி முதல் முதலில் தமிழ் திரை உலகில் சுக்கிரன் திரைப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பை 2 டிஷ்யூம் உள்ளிட்ட படங்களில் இசையமைத்துள்ளார். ஆனால் நினைத்தாலே இனிக்கும் படம் பாடல் சூப்பர் ஹிட் ஆனதை எடுத்து இவர் தமிழ் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தார்.

இதனை தொடர்ந்து காதலின் விழுந்தேன் என பல படங்களில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். நாளடைவில் இவர் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு பல படங்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் நடித்துள்ள நான் சலீம் இந்தியா பாகிஸ்தான் போன்ற படங்களிலேயே பிச்சைக்காரன் படம் தான் அதிக வசூலை அள்ளியது.

மேலும் பிச்சைக்காரன் படம் வெற்றி அடைந்ததை அடுத்து மேற்கொண்டு அதன் இரண்டாம் பாகம் தயாரித்து வருகிறார். பிச்சைக்காரன் பாகம் இரண்டாம் படம்பிடிப்பானது மலேசியாவில் லங்கா என்ற தீவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் வேலையிலேயே விஜய் ஆண்டனிக்கு திடீரென்று காயம் ஏற்பட்டதை அடுத்து தற்பொழுது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு மருத்துவர்கள் இவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். உயிருக்கு எந்த ஒரு ஆபத்து விளைவிக்கும் வகையில் அடிப்பட வில்லை என்று படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்கள் கூறுகின்றனர்.