ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை பார்க்கிறோம்! 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்.

0
128

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது.இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஓய்வில்லாமல் வேலை பார்ப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் சுகாதார துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் சென்னையில் மட்டும் நாளுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதால் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனை சரி செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஊழியர்களை 21 நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதும் 6 நாட்களுக்கு விடுமுறை என்று கூறி அழைத்து வந்து விட்டு தேவையான உணவு,ஊதியம் மற்றும் போதிய ஓய்வு தராமால் வேலை பார்க்க வைப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அவர்களை சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்குமாறு பெரிய மேடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனை அடுத்து ஆம்புலன்ஸ் மேலாளர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.மேலாளர் ஊழியர்களிடம் 3 நாட்களில் உங்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து ஊழியர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Previous articleதிருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லையா?? இந்த விரதத்தை மேற்கொண்டு பாருங்கள்!!
Next articleதமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்