ஹோமியோபதிக்கான தேசிய ஆணைய மசோதா திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Photo of author

By Anand

ஹோமியோபதிக்கான தேசிய ஆணைய மசோதா திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்

ஹோமியோபதிக்கான தேசிய ஆணைய மசோதா 2019-ல் அதிகாரப்பூர்வ திருத்தங்களுக்கான யோசனைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

1973-ன் ஹோமியோபதி மத்திய கவுன்சில்(ஹெச்.சி.சி.) சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட ஹோமியோபதிக்கான தேசிய ஆணையமசோதா 2019-ல் அதிகாரபூர்வ திருத்தங்களுக்கான யோசனைகளுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இம்மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. 

  • ஹோமியோபதி மருத்துவக் கல்வியில் தேவைப்படும் சீர்திருத்தங்களை உறுதிசெய்வது,
  • பொதுமக்களின் நலன்களைப் பாதுகாக்க வெளிப்படைத் தன்மையையும், பதில் சொல்லும் கடமையையும் கொண்டிருப்பது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் குறைந்த செலவில் சுகாதார சேவைகளை இந்த ஆணையம் மேம்படுத்தும் என்பதாகத் திருத்தங்கள் இருக்கும்.

பின்னணி

ஹோமியோபதிக்கான மத்தியப் பதிவையும், இதுதொடர்பான விஷயங்களையும் பராமரிக்க, ஹோமியோபதிக்கான கல்வி மற்றும் நடைமுறையை முறைப்படுத்த, ஹோமியோபதிக்கான மத்தியக் கவுன்சிலை அமைக்க, ஹோமியோபதி மத்தியக் கவுன்சில் (ஹெச்.சி.சி.) சட்டம் 1973 இயற்றப்பட்டது. இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம், 1956 மாதிரியுடன் இந்த சட்டம் உள்ளது. விரிவான செயல்பாடுகள், அமைப்பு விதிகள், முறைப்படுத்தும் அதிகாரங்கள் ஆகியவை இந்திய மருத்துவக் கவுன்சிலை ஒத்தவையாக உள்ளன. இந்தச் சட்டம் மருத்துவக் கல்வியின் வளர்ச்சிக்கும், ஹோமியோபதி செயல்பாட்டுக்கும் உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளது என்றாலும், இந்தக் கவுன்சில் செயல்பாட்டில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது அறியப்பட்டது. இதன் விளைவாக, மருத்துவக் கல்வியிலும், தரமான ஹோமியோபதி மருத்துவ சேவைகள் வழங்குவதிலும் பின்னடைவுகள் ஏற்பட்டன.    

Source: PIB