திருப்பூரை சேர்ந்த சிறுமிக்கு அமெரிக்க விருது !!

Photo of author

By Parthipan K

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமிக்கு மலையாள குறும்படத்தில் நடித்ததால் அவருக்கு அமெரிக்காவிருது கிடைத்துள்ளது.

திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்த பி.யூ.கிருஷ்ணன் என்பவருக்கு மகனாக மகா ஸ்வேதா என்பவர் உள்ளார்.மகள் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ள நிலையில் ,இளம் வயதிலேயே கலைத்துறையில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இதனால் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தை சேர்ந்த கஜேந்திரகுமார் என்ற இயக்குனரின் ‘கிராண்ட்மா டாய்’ என்ற மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இந்த படமானது, கடந்த ஜூன் இரண்டாம் தேதி யூடியூப் இணையதளத்தில் வெளியானது. இந்தக் குறும்படத்தை கண்ட அமெரிக்காவின் வெகாஸ் மூவி அவார்ட்ஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.

அமெரிக்காவின் லாஸ் வெகாஸில் நேற்று முன்தினம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில்,இந்த சிறுமி நடித்த குறும்படத்திற்கு சிறுமி மஹா ஸ்வேதாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து சிறுமியின் தந்தை கூறுகையில் 100 நாடுகளில் ,சிறந்த படங்கள் இருந்த நிலையில் இந்த விழாவில் தேர்வு செய்யப்பட்டது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், 12 வயது சிறுமி குழந்தை நட்சத்திரம் பிரிவில் விருது கிடைத்துள்ளது, பெருமை அளிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் ,இந்த சிறுமி ‘ஆரோடு பரயும் ‘என்ற குறும் படத்திற்காக ‘லாஃபா ‘என்ற விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.