நாயுடன் சண்டையிட்டு தங்கையை காப்பாற்றிய 6 வயது அண்ணன் முகத்தில் 90 தையல்கள்!

Photo of author

By Jayachandiran

நாயுடன் சண்டையிட்டு தங்கையை காப்பாற்றிய 6 வயது அண்ணன் முகத்தில் 90 தையல்கள்!

Jayachandiran

அமெரிக்காவைச் சேர்ந்த 6 வயது சிறுவன் பிரிட்ஜர். இச்சிறுவனின் தங்கையை நாய் ஒன்று கடிக்க வந்தபோது பயந்து தப்பித்து ஓடாமல் தைரியமாக அந்த நாயுடன் போராடியுள்ளான். இதனால் முகம், தலை போன்ற பகுதிகளில் நாய் கடித்தபோதும் விடாமல் அதனுடன் சண்டை போட்டுள்ளான்.

 

ஒரு வழியாக தங்கையை காப்பாற்றிய பின், பிரிட்ஜரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முகம் மற்றும் தலையில் கடித்து மொத்தமாக 90 தையல்கள் போடும் அளவுக்கு பாதிப்பு இருந்ததால் மருத்துவர்களே அதிர்ச்சியில் ஆடிப்போனார்கள். இதுகுறித்து அச்சிறுவன் கூறுகையில்,

என் கண் முன்னால் யாராவது இறக்க போகிறார்கள் என்றால் அது நானாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன். அதனால்தான் நாயுடன் போராடினேன் என்று அச்சிறுவன் கூறிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தைரியமான சிறுவனுக்கு பல்வேறு தரப்பில் பாராட்டு குவிந்து வருகின்றன.