போன் போட்ட அமித்ஷா! விறுவிறுப்படையும் நிவாரண பணிகள்!

0
184

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களை உறுக்குளைத்த நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்து இருக்கின்றார். அதேபோல புதுச்சேரியில் இந்த புயலால் ஏற்பட்ட சேதங்கள் சம்பந்தமாகவும் வெள்ள பாதிப்புகள் சம்பந்தமாகவும் அந்த மாநில முதல்வர் நாராயணசாமியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா விசாரித்திருக்கிறார்.

சென்ற இரு நாட்களாக தமிழகத்தை நிவர் புயல் மிரட்டி வந்த நிலையில் இன்று அதிகாலை அந்த புயல் கரையை கடந்தது இருந்தாலும் மக்கள் பலத்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். நிவர் புயல் கரையை கடந்து உள்ள நிலையில், சென்னை கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கின்றது. கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரை பாலத்தை மீறி தண்ணீர் செல்கின்றது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு இருக்கின்றது சென்னையில் 67 இடங்களில் மரங்கள் சாய்ந்து இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது செங்கல்பட்டு திருவண்ணாமலை காஞ்சிபுரம் திருவள்ளூர் விழுப்புரம் சென்னை வேலூர் கடலூர் ஆகிய மாவட்டங்களில் சேதம் கடுமையாக இருக்கின்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கின்ற 32 மாவட்டங்களில் உள்ள 14139 ஏரிகளில் இதுவரை 1697 ஏரிகள் முழுமையாக நிரம்பி இருக்கின்றன. குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்து இருக்கின்றது. பல ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்து விட்டது மரங்கள் சாய்ந்த காரணத்தால் மின்கம்பங்கள் சாய்ந்து இருக்கின்றன வீடுகளுடைய கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது சாலைகளில் விழுந்திருக்கின்றன மரங்கள் போன்றவற்றை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். தாழ்வான பகுதிகளில் இருக்கின்ற வீடுகளை சூழ்ந்துள்ள நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள் இந்தநிலையில் கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்கே சென்றிருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றார். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தரமணி வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றார் அதேபோல அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றது.

இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய தயாராக இருக்கின்றது என்று இரு மாநில முதல்வர்களிடமும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்து இருக்கின்றார்.

Previous articleபொறாமையில் பொசுங்கும் ஸ்டாலின்! செங்கோட்டையன் கிண்டல்!
Next articleஅவர் ஒரு டம்மி பீசு அவர இயக்குறதே நாங்கதான்! யார சொல்ராருனு தெரியுமா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here