தமிழகம் வரும் அமித் ஷா… சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்! அதிமுக-பாஜக கூட்டணியில் அடுத்த கட்ட நடவடிக்கை?

Photo of author

By Anand

தமிழகம் வரும் அமித் ஷா… சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்! அதிமுக-பாஜக கூட்டணியில் அடுத்த கட்ட நடவடிக்கை?

Anand

Amit Shah threatens IAS officers.. Action taken by Election Commission!!

கடந்த மார்ச் 25, 2025 அன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம், அங்கு அவர் அமித்ஷாவை சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி ராமேஸ்வரம் வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் பாம்பன் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமரை, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் தனித் தனியாக சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

தமிழகம் வரும் அமித் ஷா

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதற்கான நாள் இன்னும் உறுதியாகவில்லை. பாஜகவின் தேர்தல் வியூக நிபுணராக கருதப்படும் அமித் ஷா, பாஜகவின் முக்கிய அரசியல் கணக்குகளை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். அக்கட்சியின் தொடர் வெற்றிகளுக்கு இவரே முக்கிய நபராக கருதப்படுகிறார்.

2026 சட்டமன்ற தேர்தலைக் கணக்கில் வைத்து பாஜக திட்டங்கள்

2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலிருந்து பாஜகவின் வெற்றியை உறுதி செய்தவர் அமித் ஷா என்பதில் மாற்றமில்லை. தற்போது பீகார் மாநில தேர்தல் அடுத்து நடைபெறவுள்ளது. இதனையடுத்து 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு பாஜக தனது வலிமையை அடுத்தடுத்து தேர்தல் நடைபெறவுள்ள இந்த மாநிலங்களிலும் விரிவாக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அமித் ஷா பயணம் மேற்கொள்வதும் அவர் அங்கு தங்கள் கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பதும் வழக்கம்.

தமிழகத்தில் செல்வாக்கை உயர்த்தும் பாஜக

தமிழகத்தில் தற்போது 4 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள பாஜக, இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வியூகங்கள் வகித்து வருகிறது. அதற்காக அதிமுக உடனான கூட்டணியை மீண்டும் உறுதியாக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மோடி மற்றும் அமித் ஷா அவர்களின் தமிழக வருகை பாஜகவின் கூட்டணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமித் ஷா – எடப்பாடி சந்திப்பு

இதற்கு முன்னதாக டெல்லியில் நடைபெற்ற அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு, இரு கட்சிகளுக்குமிடையேயான கூட்டணி  சிக்கல்களுக்கு தீர்வாக அமைந்திருக்கலாம். தமிழகம் வரவுள்ள அமித் ஷா, பாஜகவின் மாநிலத் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உடனும் முக்கிய ஆலோசனைகள் நடத்தவுள்ளார். இதன் மூலம் அதிமுக – பாஜக கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகரும் என கூறப்படுகிறது.