தீவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுத்தால் திமுக ஏன் பதறுகிறது? திமுக எம்.பி ராசாவுக்கு அமித்ஷா கொடுத்த பதிலடி
தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பாக செயல்பட்டு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்வதன் மூலமாக இந்தியாவில் நடைபெறவிருந்த பெரும் அசம்பாவிதங்களை தடுத்து வருகிறது.
இதுகுறித்த தகவல்கள் தேசிய ஊடகங்களில் விவாத பொருளாக மாறி வருகிறது. ஆனால் தமிழக ஊடகங்களோ இது போன்ற தேச பாதுகாப்பு குறித்த செய்தியை மக்களிடம் செல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை மட்டுமே காட்டி இதை மூடி மறைத்து வருவதாக பொது மக்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் தான் மத்திய அரசு NIA எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது. அது குறித்த விவாதத்தில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, தற்போதைய நிலையில் NIA – விற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுவதற்கான நோக்கம் என்ன என்றும், இது ஒரு சமுதாய மக்களின் மீது தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து மத்திய அரசு ஆராய வேண்டும் என்றும் இந்த சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதனை முழுவதும் பொறுமையாக கவனித்து கொண்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா திமுக எம்.பி ராசாவிற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சபைக்கும் பதிலளித்ததாவது.
இந்த மசோதா நாட்டின் நலன் தொடர்பானது. நாட்டில் வளர்ந்து வரும் தேச விரோத பயங்கரவாதிகளை கட்டுப்டுத்த தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரம் சீர்திருத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
நேற்று கூட தேசிய மாநாட்டு கட்சி நிர்வாகிகளில் ஒருவரான செய்யது தாக்கீர் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு நான் உறுப்பினர்களுக்கு உறுதி அளிக்கிறேன். இது போன்ற பயங்கர வாத செயல்கள் வேரோடு களையப்பட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
பயங்கரவாதத்தில் எந்த பயங்கரவாதி எந்த மதம் என்பது முக்கியமல்ல. யாரையும் குறி வைத்தோ ,யாரையும் காயப்படுத்தவோ அரசுக்கு நோக்கமல்ல. இதற்கு அனைத்து எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும். என்றார் அமித்ஷாவின் இந்த பதிலிற்கு பிறகு திமுக எம்.பி ராசா வாயை திறக்காமல் அமைதியாகிவிட்டார்.
மேலும் ராசாவின் இந்த தேச பாதுகாப்பிற்கு எதிரான கேள்விக்கு பொதுமக்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக தற்போது தீவிரவாதிகளால் இலங்கையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் எத்தனை குடும்பங்கள் அழிந்து போயுள்ளன என்பதையெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
இதற்காக தமிழகத்தில் திட்டம் செயல்படுத்த போவதாக கூறப்படுகிறது, இந்த சூழலில் இதில் கூட மத அரசியலை திமுக செய்யவேண்டுமா என்றும், நாளை தமிழகத்தில் தீவிரவாத தாக்குதலால் யாராவது உயிர் இழந்தால் அந்த இழப்பிற்கு திமுக பொறுப்பு ஏற்குமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.
மேலும் தேச பாதுகாப்பிற்காக தீவிரவாதிகளை ஒடுக்க அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் திமுக ஏன் பதறுகிறது என்றும் மக்கள் மத்தியில் கேள்வி எழுகிறது. இன்னும் எவ்வளவு காலத்திற்கு தான் சாதியாலும்,மதத்தாலும் இந்திய மக்களை பிரித்து வைத்து அரசியல் செய்வார்களோ?