ADMK BJP: அதிமுகவில் எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்கு மேலாகவே மோதல் போக்கு இருந்து வந்தது. அதிலும் எடப்பாடிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்திய போது அப்பட்டமாக செங்கோட்டையனை ஒதுக்கியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக சட்டமன்ற கூட்டு தொடரிலும் அதன் வெளிப்பாட்டை பார்க்க முடிந்தது. அச்சமயத்தில் எடப்பாடி பேட்டி ஒன்றில், நாங்கள் யாரையும் எதிர்பார்த்து இருக்கவில்லை என்று செங்கோட்டையனை சாடி பேசியிருந்தார்.
அதேசமயம் இவரும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்து வந்தார். அச்சமயமே செங்கோட்டையன் புதிய கூட்டணியை உருவாக்கப் போகிறார் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் நாளடைவில் இருதரப்பும் சற்று அமைதியான நிலையில் இருந்ததால் சமரசமாகிவிட்டதாக நினைத்தனர். இடைவிடாது இரு தரப்பு மோதலானது மீண்டும் தலை ஓங்க ஆரம்பித்து தற்போது செங்கோட்டையனை எடப்பாடி கட்சியை விட்டே வெளியேற்றி உள்ளார்.
இதற்கு முக்கிய காரணம் ஒன்றுபட்ட அதிமுக வேண்டும் என கூறியதோடு, எடப்பாடிக்கு பத்து நாள் கெடு விதித்ததுதான். ஆனால் நேற்று செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துள்ளது எடப்பாடிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். அதிமுக பாஜக கூட்டணி வைத்ததிலிருந்து பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்த முக்கிய தலைவர்கள் யாரும் தற்போது இணக்கமாக இல்லை. இதற்கு எடப்பாடி போட்ட கண்டிஷன் தான் காரணம் என கூறுகின்றனர்.
அதன்படி தான் ஓபிஎஸ்ஸும் ஓரங்கட்ட பட்டார். ஆனால் பொதுவெளியில் அவர்களுடன் நட்புறவுடன் இருப்பது போல் பாஜக காட்டிக் கொள்கிறது. அந்த வகையில் தனது கட்சியை விட்டு வெளியேற்றிய செங்கோட்டையனை பாஜக சந்திக்க ஏன் இடம் கொடுக்க வேண்டும், இது கூட்டணியை பாதிக்காதா என்று கேள்வியை முன் வைக்கிறாராம். இதனால் பாஜக முக்கிய தலைமீது பெரும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.