அமித்ஷா போட்ட பக்கா பிளான்.! முக்கிய கட்சியின் கூடாரத்தை காலி செய்ய வியூகம்.!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கானாவில் பாஜக வலிமை பெற பாஜக தலைவர் அமித்ஷா தெலுங்கானாவிற்கு அடிக்கடி வருவார் என தெலுங்கானா பாஜக தலைவர் லக்ஷ்மணனன் தெரிவித்துள்ளார்.
மிஷன் 2023 திட்டத்தின் ஒரு பகுதியாக, சட்டமன்ற தேர்தலில் பாஜக தெலுங்கானாவில் 50 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை பிடிக்கும் படி தெலுங்கானா பாஜக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமண், “ஜூலை ஏழாம் தேதி நடந்த பாஜக கூட்டத்தில், தெலங்கானாவில் கவனம் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை, அறிவுறுத்தல்களை அமித்ஷா வழங்கியுள்ளார்.
மக்களவை தேர்தலில் 70 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சட்டமன்ற தேர்தல் வருவதற்கு மாநிலத்தின் மூலை முடுக்குகளை பாஜக சென்று அடைய எங்களுக்கு தேவையான அவகாசம் இருக்கின்றது. தெலுங்கானாவில் ராஷ்ட்ரிய சமிதி கட்சி மத்திய அரசின் நலத் திட்டங்களை சரியாக அமல்படுத்தவில்லை.
தெலுங்கானாவில் பிரதமர் மோடி பலம் அடைந்து விடுவார் என மாநில அரசு பயந்துபோய் இருக்கின்றது. ஒவ்வொரு மாதமும் அமித்ஷா தெலுங்கானாவிற்கு வருகை புரிவேன் என உறுதி கூறியுள்ளார். மத்திய அரசின் நலத்திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தியதா என கண்காணிக்க செய்யவும், கிராமங்களில் பாஜகவை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தெலுங்கானாவில் ஒரு தொகுதி மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், மக்களவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளை பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே பாஜக அடுத்ததாக தெலுங்கானாவை குறி வைத்துள்ளார் என தெரிகிறது.
நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில், அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர், “பாஜகவின் வாக்கு விகிதமானது, 6 மாதங்களில் 41 விழுக்காடாக உயர்ந்துள்ளது. தெலங்கானாவில் பாஜகவின் ஒட்டு மொத்த வாக்கு விகிதம் 7.5 லிருந்து 22 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தெலுங்கானாவில் 13 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக முரளிதரராவ் கூறியுள்ளார். ஆனால் நான் 18 லட்சம் முதல் 20 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அவரிடம் கூறியுள்ளேன். தெலுங்கானா பாஜக கஞ்சத்தனமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களால் உறுப்பினர்களை சேர்க்க முடியவில்லை என்றால், என்னை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் நான் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் உறுப்பினர்களைக் பெற்று தர வழிவகை செய்கிறேன்.
பாஜக வலுவிழந்து இருக்கும் இடங்களில் மட்டும் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் 1600 அரசியல் கட்சி இருக்கின்றது. ஆனால், பாஜகவின் உறுதியை எந்த கட்சியாலும் வலுவிழக்கச் செய்ய முடியாது. நமது கட்சியை கண்டு ஒரு காலத்தில் கிண்டல் செய்தவர்கள்தான் சரத்பவார், அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்கள். தற்பொழுது நமது உறுப்பினர் சேர்க்கை முகாம்களை கவனம் செலுத்திய கண்காணித்து வருகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.” என அவர் பேசியுள்ளார்.