பாலிவுட் பிரபலம் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி!

0
212

பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் ஐஸ்வர்யாராய் பச்சனுக்கு கொரோனா சோதனை முடிவில் நெகட்டிவ் என வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.இந்த நிலையில் இன்று மும்பையில் உள்ள நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எம்.பி.ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன்,அமிதாப் பச்சன்,அபிஷேக் பச்சன் ஆகியோருக்குக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் வந்துள்ளது.மேலும் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அமிதாப் டுவிட் செய்ததில், எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன் மேலும் எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பணியாற்றும் பணியாளர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.இன்னும் முடிவு வெளிவரவில்லை என்னுடன் இந்த 10 நாட்களாக இருந்தவர்கள் சோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் நலமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Previous articleஎஸ்.பி.ஐ போலி வங்கி கிளை நடத்தி வந்த கும்பல் கைது!
Next article12- ஆம் வகுப்பு மறுதேர்வுக்கு நுழைவுச்சீட்டு நாளை வெளியீடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here