நடிப்பால் மட்டுமல்லாது நடனத்தாலும் நம் அனைவரையும் கட்டி போட்ட ஒரு நடிகையாக சிம்ரன் விளங்கி வருகிறார். பல ஆண்டு இடைவெளிக்கு பின்பு மீண்டும் திரைத்துறையில் நடிக்க துவங்கியிருக்கும் சிம்ரனுக்கு சமீபத்தில் ஒரு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது, தான் நடித்த திரைப்படத்தில் தனக்கு கிடைத்த விருதினை தன் திரையுலக தோழியுடன் இணைத்து கூறி மகிழும் பொழுது அவர் இது போன்ற ஒரு ஆன்டி கேரக்டருக்கு நீ இவ்வளவு பெருமைப்படுவது கேவலமாக இருக்கிறது என்பது போன்ற வார்த்தையை விட, அதை தன்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்றும் டப்பா கேரக்டரில் நடிக்கக்கூடிய அவர் எப்படி தன்னை ஆன்ட்டி கேரக்டரில் நடிக்கக்கூடிய நான் என தெரிவிக்கலாம் இது தனக்கு மிகவும் மன வருத்தமாக இருப்பதாகவும் திரை துறையில் ஆன்டி கேரக்டர் என்று ஒன்று தனியாகவும் இருக்கிறதா அனைத்தும் நடிப்பதானே என மனம் வருந்தி பேசி இருக்கிறார். நடிகை சிம்ரன் டப்பா கேரக்டர் என கூறியதுமே அனைவராலும் அவர் நடிகை ஜோதிகாவை தான் கூறுகிறார் என அறிந்து கொள்ள முடிந்தது. காரணம் ஹிந்தி திரை உலகில் டப்பா கேரக்டரில் தான் அவர் நடித்த வருகிறார் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சினிமா துறையில் நுழைய ஆசைப்பட்ட நடிகை சிம்ரன் அவர்கள் முதலில் ஹிந்தி திரையுலகில் தொகுப்பாளினியாக நுழைந்த பொழுது ஜெயாபட்சன் அவரை பார்த்து இவரை நம் திரைப்படத்தில் நடிக்க வைக்கலாம் என கூறியவுடன் அமிதாப்பச்சனும் தங்களுடைய திரைப்படத்தில் சிம்ரனை நடிக்க வைத்திருக்கின்றனர். ஆனால் அந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமையவே சிம்ரனுக்கு அங்கு இருந்தவர்கள் நீ தென்னிந்திய திரைத்துறையில் சென்று முயற்சி செய்து பார் என கூறி அனுப்பி வைத்துள்ளனர். தென்னிந்திய திரை உலகில் வந்தவுடன் தெலுங்கில் ஒரு படமும் தமிழில் நேருக்கு நேர் என இரண்டு திரைப்படங்களும் நடித்த படங்கள் வெற்றி பெறவே தொடர்ந்து தமிழில் மிகப்பெரிய கதாநாயகியாக உருவெடுத்தார் நடிகை சிம்ரன்.