எங்கே 1000 பள்ளிகள் : கெஜ்ரிவாலிடம் அமித்ஷா கேள்வி ! பிரச்சாரங்களால் சூடாகும் டெல்லி !

Photo of author

By Parthipan K

எங்கே 1000 பள்ளிகள் : கெஜ்ரிவாலிடம் அமித்ஷா கேள்வி ! பிரச்சாரங்களால் சூடாகும் டெல்லி !

டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடக்க இருப்பதால் அரசியல் தலைவர்கள் டெல்லியை முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதன் வாக்கு எண்ணிக்கை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இதனால் இந்த ஜனவரி மாதக் குளிரிலும் அரசியல் தலைவர்களின் பேச்சால் டெல்லி சூடாகியுள்ளது. பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வர் பதவிக்காகப் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது ‘டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் 1000 பள்ளிகளை திறப்பேன் என சொன்னார் அரவிந்த் கெஜ்ரிவால். அந்த பள்ளிகளைப் பார்க்க நான் ஆசைப்படுகிறேன். அவர்களால் காட்டமுடியுமா ? நன்றாக இருந்த பள்ளிகளைக் கெடுத்ததுதான் அவர்கள் செய்தது’ எனக் கூறினார்.