கர்நாடகாவில் ஐபிஎஸ் வேலை பார்த்து கொண்டிருந்த அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நியமித்தது பாஜக மேலிடம்… அண்ணாமலையும் ஆக்டிவாக அரசியல் செய்ய துவங்கினார். ஜனநாயக கூட்டணியில் அதிமுகவும் இணைந்தது. ஆனால், 2021 சட்ட மன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இதற்கு பாஜக கூட்டணியே காரணம். சிறுபான்மையினர் ஓட்டுக்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என அதிமுக சொன்னது. இதனால் கோபமடைந்த அண்ணாமலை அதிமுக தலைவர்களை மோசமாக விமர்சித்தார். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியது அதிமுக.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்கை இப்போதே துவங்கிவிட்டன. எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமையை தலைமையாக கொண்டு பாஜக கூட்டணி அமைவதையும், முதல்வர் வேட்பாளராக பழனிச்சாமி அறிவிக்கப்படுவதிலும் அண்ணாமலைக்கு உடன்படு இல்லை.
எடப்பாடி பழனிச்சாமி வந்த பின் அதிமுக பலவீனமடைந்து விட்டது. அதன் வாக்கு குறைந்துவிட்டது. பல சாதியினரின் ஓட்டுகளை இழந்துவிட்டது. எனவே, வேறொருவரை முதல்வர் வேட்பாளராக நியமிக்கலாம் என அமித்ஷாவிடம் அண்ணாமலை சொன்னதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதில், அமித்ஷாவுக்கு விருப்பம் இல்லை. அதிமுக, பாஜக இடையே கூட்டணி, அதோடு, ஒபிஎஸ் ஆகிய எல்லோரையும் ஒன்றாக்கி தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என திட்டமிட்டிருக்கிறார்.
ஏற்கனவே சொன்னபடி எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்றால் தனது கட்சியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூறியிருக்கிறார். எனவே, அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்துவிட்டு வேறு யாரையாவது தமிழக பாஜக தலைவராக போடலாம் என அமித்ஷா கருதுகிறார். அந்த பட்டியலில் நயினார் நாகேந்திரன் முதலிடத்தில் இருக்கிறாராம்.