அமமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த வேட்ப்பாளர்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு சரியாக இன்னும் ஒன்பது தினங்களே இருக்கின்ற நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனையொட்டி ஆளும் கட்சியான அதிமுக சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் என்று பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதேபோல எதிர்கட்சியான திமுகவில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகனும் திமுகவின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவின் மகளிரணி தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் தமிழகம் முழுவதிலும் சூறாவளிப் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதேபோல டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் தன்னுடைய தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தங்களுடைய கட்சி வெற்றி பெறுவதற்காக மிகத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள்.இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் அடுத்து இருக்கின்ற திருநள்ளாறு தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக தர்பாரன்யேஸ்வரன் அறிவிக்கப்பட்டு இருக்கின்றார். இவர் நேற்றைய தினம் திடீரென்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அர்ஜூன் ராம் மேக்வால் முன்னிலையில் அவர் பாஜகவில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இவர் நேற்று காலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பிரச்சாரத்தை மேற்கொண்டு இருக்கின்றார் காலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பிரச்சாரத்தை மேற்கொண்டு விட்டு மாலையில் பாஜகவில் அவர் இணைந்திருக்கிறார் இது அந்த கட்சியினர் இடையே மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.அதேபோல திமுகவில் இருந்து வெளியே வந்த முன்னாள் சட்டசபை உறுப்பினர் ஏ ஜி சம்பத் அவர்கள் பாஜகவின் சிடி ரவி முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் இதனால் திமுகவினர் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.