அடுத்தடுத்து அரசியல் பிரமுகர்களை தாக்கும் கொரோனா வைரஸ்! பீதியில் அரசியல் கட்சியினர்!

Photo of author

By Sakthi

தமிழகத்தை பொறுத்தவரையில், கொரோனா அரசின் நடவடிக்கை காரணமாக வெகுவாக குறைந்திருந்தது.ஆனால் சமீபகாலமாகவே அதன் வேகம்.அதிகரித்திருக்கிறது. சமீபகாலமாக ஒருநாள் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.ஆகவே தமிழக மக்கள் எல்லோரும் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள். அதோடு இந்த தொற்றிற்கு எதிராக துரிதமான நடவடிக்கை மேற்கொண்ட முதல்வர் இ.பி.எஸ் அவர்களை மக்கள் தேட தொடங்கி இருக்கிறார்கள்

இந்த சூழ்நிலையில், நேற்றுமுன்தினம் நடந்து முடிந்த சட்டசபைதேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற பல பிரபலங்களுக்கு தொற்று ஏற்ப்பட்டிருக்கிறது.அதேபோல நடிகர், நடிகளுக்கும் இந்த தொற்று உருவாகி இருக்கிறது.இந்த சூழ்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதியில் அமமுக சார்பாக களம் கண்ட வைத்தியநாதனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.ஆகவே அவர் சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.