மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதையடுத்து சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், கட்சி தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment