தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டனர். இதன் காரணமாக, தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கைப்பற்றியிருக்கிறது.
ஒரத்தநாடு பேரூராட்சியில் மொத்தமாக இருக்கின்ற 15 வார்டுகளில் 9 வார்டுகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. திருச்சி மாநகராட்சியில் 47வது வார்டையும் அந்த கட்சி கைப்பற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.