கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்துள்ள எமி ஜாக்சன்!!

Photo of author

By Jeevitha

கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்துள்ள எமி ஜாக்சன்!!

எமி ஜாக்சன் அவர்கள் மதராசபட்டினம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு முதன்முதலாக அறிமுகமானார். இவர் மேலும் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மொழியை தவிர இந்தி, கன்னடம், ஆங்கிலம், போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து பெயர் பெற்றவர்.

எமி ஜாக்சன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னால் வெளியிட்ட புகைப்படத்தை ஏராளமானோர் கிண்டல் செய்து வந்தனர்.

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எமி ஜாக்சன், இது என்னுடைய ஆங்கில படத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் என்றும், இந்தத் திரைப்படத்திற்காக நான் உடல் எடையை குறைத்துள்ளேன் எனவும், இந்த புகைப்படத்தை பார்த்து கேலி செய்வது, எனக்கு மன வருத்தத்தை அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நடிகர்கள் மட்டும் தோற்றத்தை மாற்றினால் வரவேற்பளிப்பதும், இதே நடிகைகள் செய்தால் கேலி கிண்டல் செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எமி ஜாக்சனின் இந்த பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.