போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்த 8 வயது சிறுமி! திடீரென நேர்ந்த விபரீதம்!
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை குன்னத்து வீட்டை சேர்த்தவர் அசோக்குமார். இவரது மகள்ஆதித்யஸ்ரீ (8). ஆதித்யஸ்ரீ கிறிஸ்ட் நியூ லைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்த 8 வயது சிறுமி போன் வெடித்து சிதறியுள்ளது. இதில் , படுகாயமடைந்த ஆதித்யஸ்ரீ சம்பவ இடத்தில் இறந்து போனார். சிறுமியின் பெற்றோர் கதறி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பாசயனூர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிறுமியின் உயிர்இழப்புக்கு காரணம் சிறுமி போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்த சார்ஜ் போடப்பட்டுள்ளது என்று போலீசார் கூறினர்.
செல்போன் வெடி சத்தம் அக்கம் பக்கத்துவீடுகளுக்கும் கேட்டுள்ளது. அந்தளவுக்கு வெடி குண்டு போல வெடித்து சிதறியுள்ளது . பொதுவாக குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளார்.
குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை குறைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.