துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் காயமின்றி உயிர் தப்பியதாக தகவல் பரவி உள்ளது.விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படங்களில் நடித்து முடித்துள்ளார்..
சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் பந்தயத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர் அஜித், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிலும் கவனம் செலுத்தி தொடர்ந்து செய்துவருகிறார். இந்நிலையில், துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் அஜித் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அஜித் இயக்கிய ரேஸ் கார் மிக வேகமாக
அங்கு இறுத்த தடுப்புகளில் மோதி, சில முறை சுழன்றபடி நின்றது . காரின் முகப்புப் பகுதிகள் முற்றிலும் சேதமடைந்தது தெரிகிறது.
விபத்து நடக்கும் போது மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் காரை அஜித் வேகமாக ஓட்டினார் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த வித காயமுமின்ற அஜித்குமார் உயிர்பிழைத்துள்ளார்.
இதேபோல் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடக்கும் நிலையில், திரைப்படமானது வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இன்று முதல் அவர் மீண்டும் பயிற்சியை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.