விஜய் தேவர் கொண்டாவின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து!! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹீரோ!!

Photo of author

By Gayathri

VD 12 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட விஜய் தேவர் கொண்டாவின் படத்தினை இயக்குனர் தின்னனுரி தற்பொழுது இயக்கி வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.இப்படத்தை ஜெர்சி புகழ் கவுதம் தின்னனுரி இயக்குகிறார், மேலும் இதில் இளம் நடிகைகளான பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் ருக்மணி வசந்த் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த திரைப்படம் மார்ச் 28 2025 ஆம் ஆண்டு வெளிவரும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடைபெற்ற VD12 க்கான உயர் மின்னழுத்த ஆக்‌ஷன் காட்சியை படமாக்கும்போது விஜய் தேவரகொண்டாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. எனினும் தனக்கு ஏற்பட்ட காயத்தினை பெரிதும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பு விஜய் தேவர் கொண்டவர்கள் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் இவருடைய இந்த அர்ப்பணிப்பு பட குழுவை பெரிதும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் இவர் இந்த படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.