தமிழைத் தொடர்ந்து பல மொழி சினிமாவில் கலக்கும் இருக்கும் நடிகர்!! இனிமேல் இவரு வேர்ல்ட் ஃபேமஸ் ஆக போறாரு!!

0
124
An actor who will be mixing in multi-language cinema following Tamil !! He is going to become world famous from now on !!
An actor who will be mixing in multi-language cinema following Tamil !! He is going to become world famous from now on !!

தமிழைத் தொடர்ந்து பல மொழி சினிமாவில் கலக்கும் இருக்கும் நடிகர்!! இனிமேல் இவரு வேர்ல்ட் ஃபேமஸ் ஆக போறாரு!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும் 1997ஆம் ஆண்டு முதலில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவலம் வந்தார். இதைத்தொடர்ந்து நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, 24 போன்ற வெற்றித் திரைப்படங்களை நடித்துள்ளார். இவரின் நடிப்புத் திறனால் 3 தமிழக அரசு திரைப்பட விருதுகள் பெற்றுள்ளார். நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். இரண்டு எடிசன் விருதுகள் மற்றும் ஒரு சினிமா விருதுகள் பெற்றுள்ளார் மேலும் விஜய் விருதுகள் போன்ற பல விருதுகளை வென்றுள்ளார்.

இவர் இந்திய பிரபலங்களில் வருவாயை அடிப்படையாக கொண்ட போர்பஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் சூர்யா ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராகவும் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இவர் 2006ல் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இணைந்து சில திரைப் படங்களில் நடித்துள்ளனர். மேலும் சூர்யாவின் தனித்துவம், நடிப்பு மற்றும் அவரின் சமூக சேவையை செய்யும் மனப்பான்மை போன்றவற்றிற்காக இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அண்மையில் நடிகர் சூர்யாவின் இயக்கத்தில் வாடிவாசல், எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் மேலும் ஒரு படம் உருவாகி வருகிறது.

அந்தப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. அந்த படத்தின் பெயர் ஜெய் பீம். இந்த படத்தை பிரபல இயக்குனரான கூட்டத்தில் ஒருவன் திரைப்பட இயக்குனர் டிஜே.ஞானவேல் இயக்கியுள்ளார். மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் ஒரு நல்ல வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக பிரபல கர்ணன் பட நடிகை ராஜிஷா நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தை பற்றிய மேலும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவல் என்னவென்றால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் சூர்யா நடிப்பில் உருவாகும் ஜெய் பீம் திரைப்படம் வெளியாக உள்ளதாம். மேலும் இந்த செய்தியை ஜெய்பீம் படத்தின் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

author avatar
CineDesk