எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அலர்ட்!! எச்சரிக்கை அறிவிப்பு!!
இந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியும் ஒன்று. இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை அறிவித்துள்ளது. ஆன்லைன் பன மோசடி நடப்பதாகவும் மேலும் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் வாடிக்கையாளர்களின் பெயரில் நிலையான வைப்புக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள் என்றும் அறிவித்துள்ளது. இது குறித்து எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு எஸ்.பி.ஐ தலைமையகம் அறிவித்துள்ளது.
மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கின் தகவல்களை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஓடிபி, சிவிவி, கார்டு எண், பாஸ்வோர்ட் போன்ற தகவல்களை பகிர வேண்டாம் என்றும், இது போன்ற தகவல்களை வங்கி போன் மூலமாகவோ அல்லது எஸ்மஸ் மற்றும் இ-மெயில் மூலமாகவோ கேட்காது என்றும் கூறியுள்ளது.
இந்த தகவல் குறித்து எஸ்.பி.ஐ தங்களின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட தகவல் பின்வருமாறு: தங்கள் வங்கி விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். எங்கள் வங்கியை சேர்ந்தவர்கள் போல் காட்டிக் கொள்பவர்களின் வலையில் விழாதீர்கள். அவர்களிடம் பாஸ்வேர்டு / ஓடிபி / சிவிவி / கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை ஒரு போதும் கொடுக்காதீர்கள். மேற்கண்ட விவரங்களை ஒருபோதும் எஸ்பிஐ தொலைபேசியில் கேட்காது. எச்சரிக்கையாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள் என எச்சரித்துள்ளது.