Reserve Bank : இந்தியாவில் ஐயாயிரம் ரூபாய் நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இந்தியாவில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் தயாரிப்பை நிறுத்துவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. எனவே தற்போது, இந்தியாவில் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 ஆகிய ரூபாய் நோட்டுகள் மட்டுமே மக்கள் புழக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் பச்சை நிற ரூ.5000 நோட்டுகள் விரைவில் அமலுக்கு வர உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், பொருளாதார பரிவர்த்தனைகள் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்படும் வருகிறது. எனவே புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிட வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. தற்போது இணையத்தில் பரவி வரும் ரூ.5000 நோட்டுகள் குறித்து எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்புகளையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்.
இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து இருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு தற்போது புழக்கத்தில் உள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து இருந்து ரிசர்வ் வங்கி, அப்போது பழைய 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தால் இந்திய மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.