மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக புகழ் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.அத்தகைய கோவிலின் மிக முக்கியமான நுழைவாயில் ஒன்று இன்று திறக்கப்பட உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் மக்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டுமே வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருக்கும் மிகவும் முக்கியமான நுழைவாயில் இன்று திறக்கப்படுகிறது.இந்த நுழைவாயில் மேற்கு கோபுரம் நுழைவாயிலுக்கு அருகே உள்ளது.இந்த மேற்கு கோபுர நுழைவாயிலில் இருந்து 15 முதல் 20 மீட்டர் தொலைவில் அந்த முக்கியமான வாயில் உள்ளது.
இந்த வாயில் ஆனது கடந்த 80 வருடங்களாக மூடப்பட்டே உள்ளது.சுத்தப்படுத்தும் பணிகள் முடிந்த பின்னர் இந்த வாயிலை திறக்க உள்ளனர்.இந்த வாயிலின் மூலம் நேரடியாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம்.இத்தனை வருட காலம் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் மூடப்பட்டிருந்த இந்த வாயில் தற்பொழுது திறக்கப்பட உள்ளது.ஆனாலும் பொது முடக்கம் காரணமாக மக்கள் இதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இருப்பினும் இந்த வாயில் திறக்கபடுவது மதுரை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.