தமிழ்நாடு மின்சார வாரியமான tangedgo தமிழக மக்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளது. அந்த ஆலோசனையில் அனைத்து வீடுகளிலும் ஆர்சிடி என்ற பாதுகாப்பு கருவி பொருத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கையை விடுத்துள்ளது. இந்த ஆர் சி டி உங்கள் உயிரை காக்கும் இதனை உங்கள் கட்டிடத்தில் உள்ள மின் இணைப்புகளில் ஏதேனும் சிறிதளவு பழுது ஏற்பட்டால் அல்லது மின் கம்பிகள் வழியாக மின் கசிவு ஏற்பட்டால் அதன் வழியாக வெளியேறும் மின்னோட்டத்தை நிறுத்தி விடும்.
இதை அனைவரும் உங்கள் அருகில் உள்ள மின் திறனாளர்களை கொண்டு 30mA ஆர் சி டி யை பொருத்துங்கள் என மின்சார வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த ஆர் சி டி யை உங்கள் வீடுகளில் பொருத்துவதன் மூலம் மின்கசிவினால் மற்றும் மின்சாரத்தினால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும்.
ஆர் சி டி என்பது ஒரு பாதுகாப்பு கருவி ஆகும். இது நமது வீடுகளில் ஏற்படும் மின் கசிவு மற்றும் மின் கம்பிகளில் செல்லும் சீரான மின்னோட்டத்தில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் இந்த ஆர் சி டி கருவியானது அந்த மின் கம்பிகளில் செல்லும் மின்னோட்டத்தை தானாக நிறுத்திவிடும். நமது வீட்டில் உள்ள பியூஸ் கேரியர் போன்றது பியூஸ் கேரியர் இல்லை என்றால் நமது வீடுகளுக்கு மின்னோட்டம் செல்லாது. ஆனால் இந்த ஆர்சிடி யானது அதை விட வேகமானது, மேலும் அதை விட திறனும் அதிகம் கொண்டது. இதன் மூலம் நம் (ஷாக்) மீது மின்சாரம் பாயாமல் தடுக்க முடியும்.
நாம் மின்னோட்ட வயரினை தொடும்போது நம் வழியாக மின்சாரம் பாயும் அவ்வாறு நம் மீது மின்னோட்டம் பாயும்போது இந்த ஆர் சி டி அறிந்து அதனை உடனடியாக அனைத்து விடும். பொதுவாக ஈரமான நிலையில் நம் மீது மின்சாரம் பாயும் வேகத்தை அதிகரிக்கிறது. ஈரமாகவும், நேரடியாக தரையுடன் தொடர்பு கொள்ளும் போது மின்சாரம் பாய்வதை எளிதாக்குகிறது இது போன்ற சூழலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இந்த ஆர்சிடி உதவும் என அறிவித்துள்ளது.