TNPSC தேர்வர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !! தேர்வாணையம் வெளியிட்ட புதிய தகவல் !!

Photo of author

By Preethi

TNPSC தேர்வர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !! தேர்வாணையம் வெளியிட்ட புதிய தகவல் !!

Preethi

Updated on:

an-important-notice-for-tnpsc-candidates-new-information-published-by-the-selection-board

TNPSC தேர்வர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !! தேர்வாணையம் வெளியிட்ட புதிய தகவல் !!

கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் துறை தேர்வுகளுக்கான புதிய அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்திருந்தது. இந்நிலையில் அதை தொடர்ந்து கடந்த மே மாதம் துறைகளுக்கான தேர்வுகள் சென்னை மற்றும் டெல்லி உட்பட 39 தேர்வு மையங்களில் நடைபெற்று முடிவடைந்தது. இந்நிலையில் TNPSC தற்போது 122 கொள் குறி வகை தேர்வுக்கான தற்காலிக விடை குறிப்புகளை தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது.

இந்த விடை குறித்து தேர்வு எழுதிய அனைவரும் தங்களின் உத்தேசங்களை தெரிவிக்க ஒரு மின்னஞ்சல் முகவரி கொடுக்க உள்ளது என புதிய தகவல் வெளிவந்துள்ளது . இந்நிலையில் தற்போது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது.மேலும் துறை தேர்வுகளை எழுதிய தேர்வர்கள் இன்று முதல் ஜூன் இருபதாம் தேதி மாலை 5.45 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தேர்வர்கள் அனைவரும் தேர்வாணையம் வெளிவிட்ட விடை குறித்து தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளது. எனவே கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு தேர்வர்களை கேட்டுக்கொண்டுள்ளது . இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.