ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதல்!! இந்தியர் ஒருவர் பலி!!

0
234
#image_title

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதல்.இந்தியர் ஒருவர் பலி.

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த் 2021 முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே அங்கு மோதல் வெடித்ததை தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறை நடைபெற்று வருகிறது.

சூடான் தலைநகர் மற்றும் அதிபர் மாளிகை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை கைப்பற்றி இருப்பதாக துணை இராணுவம் அறிவித்துள்ளது.

அங்கு வசித்து வரும் இந்தியர்கள் வெளியில் செல்ல வேண்டாம் எனவும், வீடுகளுக்கு உள்ளேயே தங்கி இருக்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்த வன்முறையில் இதுவரை 25க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அங்குள்ள DAL குழும நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்ற இந்தியர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த ஆல்பர்ட் அகஸ்டின் காயத்தின் காரணமாக உயிரிழந்திருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த இந்தியரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் அடுத்த கட்ட ஏற்பாடுகளை மருத்துவ அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபாராளுமன்ற உறுப்பினர் அவினாசி ரெட்டியின் தந்தை பாஸ்கர் ரெட்டி கைது!
Next articleமீனாட்சி பொண்ணுங்க தொடரில் இருந்தது விலகிய – பிரபல சின்னத்திரை நடிகை!!