செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தை பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது!!

Photo of author

By CineDesk

செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தை பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது!!

CineDesk

An interesting information about the Czech Red Sky movie has been released !!

செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தை பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கும் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, மற்றும் அருண்விஜய் ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் செக்கச் சிவந்த வானம். இந்தப் படம் 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு இயக்குனர் மணிரத்தினம் தமிழில் இயக்கியுள்ள திரைப்படம் ஆகும்.

மேலும் இப்படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி மற்றும் அருண் விஜயுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், ஜோதிகா, அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கப்பட்ட இசை மற்றும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது. இத்திரைப்படம் செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. மேலும் இது கொரிய மொழியில் வெளியான நியூ வேர்ல்ட் திரைப்படத்தை தழுவி இப்படம் தமிழில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் திரையில் வெளியாகி எதிர்பாராத அளவில் மக்களை ஈர்த்தது. மேலும் இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் பெருமளவில் வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து இந்தத் திரைப்படம் குறித்து தற்போது சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இப்படத்தில் முதலில் துல்கர் சல்மான் மற்றும் பகத் பாசில் ஆகியோரை நடிக்க வைப்பதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாம். பிறகு அவர்களுக்கு தேதி கிடைக்காததால் இப்படத்தில் பணியாற்ற முடியாமல் போய் விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இருவரும் இப்படத்தில் நடித்திருந்தால் சிம்பு அல்லது அருண் விஜய் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.