தள்ளாடும் வயதில் தற்கொலைக்கு முயன்ற முதியவர்!. காரணம் என்ன?..

0
199
An old man who tried to commit suicide at a faltering age! What is the reason?
An old man who tried to commit suicide at a faltering age! What is the reason?

தள்ளாடும் வயதில் தற்கொலைக்கு முயன்ற முதியவர்!. காரணம் என்ன?..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே பெரியார் பாலம் அருகில் முதியவர் ஒருவர் தன்னுடைய இரு கால்களையும் இறுக்கமாக கட்டிக்கொண்டு காவிரி ஆற்றில் குதித்துள்ளார்.இதனைக் கண்ட அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

காவல்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து வந்து அந்த முதியவரை ஆற்றில் இருந்து மீட்டெடுத்தனர். மயங்கிய நிலையில் இருந்த அந்த முதியவரை முதல் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் முதியவர் யார்?எதற்காக தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த முதியவர்  கரூர் மாவட்டம் பஞ்ச பட்டியை சேர்ந்த ராமசாமி என்பதும், இவருடைய வயது 73 எனவும் தெரியவந்தது.

இதையடுத்து அவரது குடும்பத்திற்கு போலீசர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் விரைந்து வந்த முதியவரின் குடும்பத்தினர் அவரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.இந்நிலையில் முதியவரை  காப்பாற்றிய பேரிடர் மீட்பு குழு மற்றும் தீயணைப்பு துறையினருக்கு முதியவரின் குடும்பத்தினர் நன்றியை தெரிவித்தனர். இச்சம்பவம் காவிரி கரையோர பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

Previous articleரயிலை புரட்டிப் போடுவதற்கு ஏற்பாடு! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு!
Next articleகரையானின் சாபத்தால் பலியான 13 வயது சிறுமி!. இதற்குக் காரணம் தந்தையா?