கடவுளை திருமணம் செய்து பரபரப்பை கிளப்பிய பட்டதாரி பெண்…வேதனையில் 90’ஸ் கிட்ஸ் !

0
196

சிலர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள், சிலருக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்காது ஆனால் பலரும் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தி இருக்கிறது என்பதை நம்புகின்றனர். புராணக்கதைகளில் மக்கள் கடவுள் மீது எந்தளவு அதீத பற்றும், நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் பல கதைகளில் கேட்டிருக்கிறோம். இதற்கு சிறந்த உதாரணமாக மீரா பாயை சொல்லலாம் அவர் கிருஷ்ணன் மீது தீராத அன்பு கொண்டிருந்தார், இந்த கதைகளை நாம் சிறுவயதில் கேட்டிருப்போம். இதுபோன்ற விஷயங்களை நாம் இதுவரை கதைகளில் தான் கேட்டறிந்திருக்கிறோம் ஆனால் இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது உண்மையிலேயே அரங்கேறி இருக்கிறது.Pooja Singh Jaipur : भगवान से शादी कर ने वाली पूजा ने Insta पर शेयर की दिल  की बात, देखें Wedding Album | Jaipur girl Pooja Singh Shekhawat married  Lord Vishnu See

ஜெய்ப்பூரில் உள்ள நரசிங்புரா கிராமத்தை சேர்ந்த பூஜா சிங் என்கிற பெண் தான் செய்துள்ள காரியம் அப்பகுதியில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 30 வயதாகும் பூஜா சிங் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார், இவர் தற்போது கடவுள் விஷ்ணுவை மணந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் திருமண தகராறுகளை சமாளிக்க விரும்பாததால் அவர் கடவுளான விஷ்ணுவை மணந்திருக்கிறார். இதுகுறித்து பூஜா கூறுகையில், “அற்ப விஷயங்களில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படுவதை நான் பார்த்திருக்கிறேன், அத்தகைய தகராறில் அவர்களின் வாழ்க்கை கெட்டுப்போகும். இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள் தான், அதனால் நான் கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.Pooja Singh Lord Vishu Marriage see unique photos viral on social media |  भगवान विष्णु के साथ पूजा ने लिए सात फेरे, सिंदूर की जगह चंदन से भरी मांग,  देखें तस्वीरें |

பூஜா சிங்கின் தந்தை ஒரு ஓய்வு பெற்ற பிஎஸ்எஃப் அதிகாரியாக இருக்கிறார், பூஜா கடந்த டிசம்பர் 8ம் தேதியன்று கடவுள் விஷ்ணுவை மனத்துள்ளார். தனது மகளின் செயலால் கோபமடைந்த பூஜாவின் தந்தை திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பூஜாவின் தாயார் ரத்தன் கன்வார் தனது மகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து கன்யாதானம் செய்து வைத்துள்ளார். இந்த திருமண நிகழ்வில் சுமார் 300 பேர் கலந்துகொண்டுள்ளனர் மற்றும் முறைப்படி அனைத்துவித சடங்குகளும் இந்த நிகழ்வில் நடைபெற்றது. 90’ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் திருமணமாகாத பெண்கள் இப்படி கடவுளை திருமணம் செய்ய ஆரம்பித்தால் தங்கள் நிலைமை என்னாகும் என நினைத்து 90’ஸ் கிட்ஸ் பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Previous articleகிரீன் டீ குடித்தால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா ? உண்மையாகவே க்ரீன் டீ ஆரோக்கியமானதா ?
Next articleடிகிரி முடித்திருந்தால் போதும்…தமிழக அரசின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..உடனே விண்ணப்பியுங்கள் !