யாரும் எதிர்பாராத கூட்டணி !! எகிறும் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு !!

Photo of author

By Rupa

தமிழில் முன்னனணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவரின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆனது. அதனால் ரசிகர்கள் பெரும் எதிர் பார்ப்பில் உள்ளனர்.  தற்போது  சிறுத்தை சிவா இயக்கத்தில் ரூ.350 கோடி  பொருட்செலவில் உருவான திரைப்படம் கங்குவா.

இந்த திரைப்படம் 3D மற்றும் IMAX முறையில் 10 மொழிகளில் உருவான இத்திரைப்படம் 30 மொழிகளில் டப் செய்யப்பட்டு பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த மாதம் 10-ம் தேதி வெளியாக இருந்த நிலையில்  எதிர்பாராத வகையில் அடுத்த மாதம் நவம்பர் 14-ம் தேதி தள்ளிவைக்கப்பட்டது இத்திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் சூர்யாவின் 45-வது படத்தின் அப்டேட் நேற்று மாலை 14-ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தினை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார் , ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.  ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது  இந்த போஸ்டரில் அரிவாள் மற்றும் குதிரை இடம்பெற்றுள்ளது இதனால் திரைப்படத்தின் பெயர் கருப்பு என வைக்க அதிக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

இதுவரையில் சேராத ஒரு கூட்டணி முதல் முறை சேர்ந்து சூர்யாவின் படத்தினை இயக்க உள்ளனர். அதனால் ரசிகர்கள் அனைவரும் இந்த கூட்டணியில் வரும் திரைப்படம் எப்படி இருக்கும் என ஆவலுடன் எதிர் பார்த்து வருகின்றனர்.