சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஆனந்த கண்ணனின் திருமண புகைப்படம்

0
255

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஆனந்த கண்ணனின் திருமண புகைப்படம்

90 காலகட்டங்களில் சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் ஆனந்த் கண்ணன். நகைச்சுவையான பேச்சு,நடிப்பு எராளமான ரசிகர்களை கவர்ந்தது.

அப்போது ஒளிப்பரப்பான சிந்துபாத் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.அதன் பின்னர் சில ஆண்டுகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாமல் அவருடைய சொந்த ஊரான சிங்கப்பூரில் வசித்து வந்தார்.

இவர் சிங்கப்பூரில் வசிக்கும் போது தமிழ் பாரம்பரிய கலைகளை வளர்க்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.அந்த வகையில் அங்குள்ள பலருக்கும் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை கற்று கொடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இடையில் ஒரு தொலைக்காட்சியில் விஜேவாக வாய்ப்பு கிடைத்து பணியாற்ற ஆரம்பித்தார்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஆனந்த கண்ணனின் திருமண புகைப்படம்

 

அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதுமட்டுமல்லாமல் இவர் மேலும் சில படங்களில் நடித்திருந்தாலும் தொலைக்காட்சியை போல வெள்ளித்திரை இவருக்கு வாய்ப்பை கொடுக்கவில்லை.

இவ்வாறு நடிகர்,நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் தமிழ் ஆர்வலர் என வலம் வந்த இவர் சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இந்நிலையில் தான் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஆனந்த கண்ணனின் திருமண புகைப்படம்

இதனையடுத்து ஆனந்த கண்ணனின் நினைவாக பலரும் சமூக வலைத்தளங்களில் அவருடைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட அவருடைய திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது.

Previous articleஇந்திய சுதந்திரப் போராட்ட வீரரின் நினைவு நாள்! ராணுவத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர்!
Next articleடிக்டாக் பிரபலத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்! காட்டு மிராண்டிகள் செய்த செயல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here