தமிழகத்தில் உள்ள கல்வித்திட்டத்தின் படி அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும் தேர்ச்சி என்பது நடைமுறையில் இருக்கிறது. 8ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் இருக்கும் மாணவர்களை மதிப்பைண்ணை காரணம் காட்டி ஃபெயில் ஆக்கினார் அது அவர்களின் மனநிலையை பாதிப்போடு, கற்றல் திறனையும் பாதிக்கும் என்பதாலேயே அரசு இதை கடைபிடித்து வருகிறார்.
ஆனால், பாஜாக அரசு தேசிய கல்விக் கொள்கை மூலம் இதை மாற்ற நினைக்கிறது. அந்த கொள்கை படி 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு ஆகியவற்றில் குறைவான மதிப்பெண் எடுத்தால் அவர்களை தோல்வி அடைந்தவர்களாக காட்டி ஃபெயில் ஆக்கிவிடுவார்கள். அதோடு, வேறு சில விஷயங்களையும் தேசிய கல்விக் கொள்கையில் திணிக்க பாஜக அரசு திட்டமிடுகிறது.
இதற்கு ஏற்கனவே கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சூர்யா கூட இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு இமெயில் அனுப்புங்கள் என கோரிக்கை வைத்தார். தற்போது எப்படியாவது இந்த தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வரவேண்டும் என பாஜக அரசு நினைக்கிறது.
இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் ‘5,8ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றால் பெயில் ஆக்குக்ம் சிபிஎஸ்இ நடவடிக்கைக்கு எதிர்ப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இப்படி பெயில் ஆக்கினால் மாணவர்களின் இடை நிற்றல் அதிகரிக்கும். சிபிஎஸ்இ நடவடிக்கைக்கு பெற்றோர்கள் கையெழுத்து போடாமல் கேள்வி கேட்க வேண்டும்’ என பேசியிருக்கிறார்.