பள்ளிகளை திறப்பது எப்போது?!.. புது தகவலை சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!…

0
41

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் முழு ஆண்டு தேர்வு முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். இந்த முறை அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு 24.04.2025 அன்று முடிவடைந்து 25.04.2026 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணியிணை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் 30-04.2026 எனவும். 2025-2026ம் கல்வியாண்டில் 02:06.2025 (திங்கள் கிழமை) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

02.06.2025 அன்று பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகளை வழங்குமாறு அணைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேநேரம், ஜூன் முதல் வாரம் தமிழகத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் ஜுன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘வெயிலின் தாக்கத்தை பொறுத்து முதல்வரின் அறிவுறுத்தலில் பள்ளிகள் திறக்கப்படும்’ என கூறினார். மேலும், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous article1 நாளில் வயிற்றில் உள்ள குடற்புழு வெளியேற.. தண்ணீருடன் இதை சேர்த்து பருகுங்கள்!!
Next articleரோலக்ஸ் படம் எப்போது?… செம அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!..