அமைச்சர் உதயநிதி கொளுத்திப் போட்ட அன்பில் மகேஷ்! சூடுபிடிக்கும் திமுக அரசியல் களம்!

0
90

எதிர்வரும் ஆண்டு ஜூன் மாதம் உதயநிதியை அமைச்சராகும் விதத்தில் தற்போது இருந்தே அமைச்சர் உதயநிதி என்ற முழக்கத்தை கையிலெடுத்திருக்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்று பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.

அரசியல் ரீதியாக திமுக மீது எதிர்க்கட்சியினர் இன்றும் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு வாரிசு அரசியல் அதற்கு பல கட்டங்களில் திமுக தரப்பில் பதில்கள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் இன்னமும் அந்த குற்றச்சாட்டு மாறவில்லை. அதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக ஒரு விவகாரம் அரசியல் களத்தில் முன்வைக்கப்படுகிறது. அதுதான் அமைச்சர் உதயநிதி என்று தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொளுத்திப் போட்ட வெடி என்று சொல்லப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் போது உதயநிதிக்கு தொகுதி ஒதுக்கும் சமயத்தில் கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஒருவித அதிர்ச்சி குரல் இருந்ததாக தெரிவிக்கப் பட்டது. இருந்தாலும் தொகுதி ஒதுக்கப்பட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி வெற்றி பெற்றார். தற்சமயம் மழை வெள்ளப் பாதிப்பு கால கட்டத்தில் பொது மக்களை நேரடியாக சந்தித்து நிவாரணங்களை மற்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

சட்டசபை உறுப்பினர் என்ற பதவியை அடைந்தவுடன் அடுத்து அமைச்சர் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த தருணத்தில் வாரிசு அரசியல் குற்றச்சாட்டை முன்வைத்து அதை அப்போதைய ஸ்டாலின் மறுத்துவிட்டார் என ஒரு பேச்சு எழுந்தது. இதனால் தான் உதயநிதி பெயர் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் தற்சமயம் காலத்தின் கட்டாயம், பொதுமக்களின் விருப்பம் உதயநிதிக்கு அமைச்சராக தகுதி இருக்கிறது என்ற பேச்சுக்கள் மெல்ல, மெல்ல எட்டிப் பார்க்க ஆரம்பித்து இருக்கின்றன. அதன் முதல் அம்சமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது தொடர்பாக கொளுத்திப் போட்டிருக்கிறார் என்று தெரிவிக்கிறார்கள் அறிவாலயத்தை நன்றாக அறிந்த ஒரு சிலர்.

இது தொடர்பாக பல்வேறு தகவல்களை விவரம் அறிந்த அரசியல் பிரமுகர்கள் தெரிவிக்கிறார்கள் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுவது சாதாரணமானது இல்லை அதிலுள்ள சூட்சம அரசியல் என்பது வேறு விதமாக இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள்.

எதிர்வரும் ஆறு மாதத்தில் அமைச்சரவையில் உதயநிதிஸ்டாலின் இடம்பெற வேண்டும் என்பதுதான் தற்போது அவர்களுடைய எண்ணம், எதிர்வரும் ஆண்டு ஜூன் மாதம் அதாவது ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு வருடம் கழித்து அமைச்சரவையில் உதயநிதி இடம் பெறுவார் என்று அவர் சட்டசபை உறுப்பினராக பொறுப்பேற்றபோது பேச்சுகள் எழுந்தன.

அதற்கான தொடக்க செயல்பாடுகள் அல்லது முன்னோட்டம்தான் இது என்று சொல்லப்படுகிறது. திமுகவில் மட்டும்தான் இப்படி என்று இல்லை அதிமுகவிலும் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு செயல்பாடு பின்பற்றப்பட்டு சசிகலா முன்னிலைப் படுத்தப் பட்டார்.

அதன் பின்னர் தான் பொதுச் செயலாளராகவும், அதன்பிறகு முதலமைச்சர் பதவியை நோக்கியும் சசிகலா தன்னுடைய பயணத்தை தொடங்கினார். ஆனால் அரசியல் சூழல் காரணமாக, அவருடைய நிலைமை இப்போது மாறி விட்டது. அப்படி ஒரு சூழ்நிலையை தான் தற்சமயம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாய்திறந்து அமைச்சர் உதயநிதி என்ற முழக்கத்தை பேசியிருக்கின்றார். இது படிப்படியாக அடுத்த கட்டத்திற்கு தானாகவே முன்னேறி விடும் என்று தெரிவிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நிதானத்தைக் கடைபிடிக்க விரும்பினாலும் திமுகவின் கிச்சன் கேபினட் அரசியல் வேகமாகவே இருக்கிறது என தெரிவிக்கிறார்கள் ஒருசிலர். இதன் காரணமாக தான் அன்பில் மகேஷ் பேச வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கிறார்கள்.

இனி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அமைச்சர் உதயநிதி என்ற பேச்சுக்கள் மெதுவாகவும் பின்பு வேகமாகவும் ஒலிக்கும் என்றும், எதிர்வரும் ஆண்டு ஜூன் மாதம் திமுக பதவியேற்று ஓராண்டு போனபின்னர் நிச்சயமாக உதய நிதி அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று தெரிவிக்கிறார்கள் திமுகவின் உடன்பிறப்புகள்.