அன்பில் மகேஷ்: நீட் தேர்வு குறித்த முக்கிய தகவல்!! மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டம்!!
திமுக கூறியிருந்த அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் தற்பொழுது வரை நீட் தேர்வு விலக்கு அளிக்க முடியவில்லை. இது குறித்து பல முறை மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித பயனளிக்கவில்லை. அதற்கு மாறாக நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு தான் வருகிறது. பலருக்கும் திமுக கண்துடைப்பு நாடகம் ஆடுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தற்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளையின் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். மேற்கொண்ட பேசிய அவர், நீட் தேர்வு ரத்து செய்யும் வரை அதற்கான பயிற்சிகள் நடைபெறும் என்று கூறினார்.எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு அமர்த்தப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்துவது குறித்து வரும் பத்தாம் தேதி நிதி அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறினார்.
இவர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்துவது குறித்து முதலமைச்சர் ஆலோசனையுடன் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதேபோல ஆங்காங்கே தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டு விட்டது என்று கூறுகின்றனர். ஆனால் சில இடங்களில் அதற்கான ஆசிரியர்கள் இல்லாததே இந்த தொழிற்கல்வி பாடம் எடுக்காததற்கு காரணம்.ஆசிரியர்கள் உள்ள இடத்தில் தொழிற்கல்வி பாடங்கள் நடைபெற்று தான் வருகிறது என்று தெரிவித்தார்.
சில மாதங்களாக மாணவர்களிடையே போதை பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது. அதனை தடுக்க அவர்களுக்கு விழிப்புணர்வு செய்து வருவதாகவும் கூறினார். போதையற்ற பள்ளிகள் மற்றும் மாணவர்களாக மாற இந்த சிற்பி திட்டம் மிகவும் பயனுள்ளதாக காணப்படுகிறது என்று தெரிவித்தார்.