PMK: பாமக-வில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அப்பா மகன் என இருவரும் இதற்கு போட்டிபோட்டுக் கொண்டு தேதியை அறிவித்தனர். இது ரீதியாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது, ஆனால் ராமதாஸ் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்கொண்டு அன்புமணி அறிவித்த நாளிலேயே பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது.
இதில் அன்புமணி நியமித்த நிர்வாகிகள் என அனைவரும் கலந்துக் கொண்டனர். ராமதாஸ் கலந்துக் கொள்வார் என்ற எண்ணத்தில் அவருக்கு அன்புமணி பக்கத்தில் தனி இருக்கையை வைத்துள்ளனர். தற்போது அந்த இடம் காலியாக இருப்பது குறித்து செய்திகள் எங்கும் சோசியல் மீடியாவில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. மேற்கொண்டு இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் நிர்வாகிகள் அணிந்திருக்கும் பேட்சியில் தொடங்கி கட்டவுட் வரை அனைத்திலும் ராமதாஸ் படம் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் அன்புமணி, நான் செய்ய வேண்டிய அனைத்து முறைகளையும் மரியாதையும் செய்கிறேன். ஆனால் அதை அவர் தான் மறுத்து வருகிறார் என்பது காட்டும் விதமாக உள்ளது. ஆனால் இதற்கு முன் பல கூட்டங்கள் கூடிய போதும் அவ்வளவு ஏன் சில போஸ்டர்களில் கூட ராமதாஸ் படம் இடம் பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது மட்டும் ஏன் விளம்பர நோக்கத்திற்காக அன்புமணி இப்படி செயல்பட வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாமகவின் உட்கட்சி மோதல் என்பது இறுதி அத்தியாயம் வரை தீரா முடிவாக இருக்கும் என்பது இதை வைத்து பார்க்கையில் புரிந்துக் கொள்ள முடிகிறது. மேலும் இவர்கள் இரு அணிகளாக பிரிந்து செயல்படவும் அதிக வாய்ப்புள்ளது.