திமுக கூட்டணியில் இணைகிறதா பாமக? ரகசிய உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்ட முதலமைச்சர்!

0
105

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுடைய மகள் திருமணம் கடந்த ஒன்றாம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்பதால் அதன் பின்னர் மிகப்பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது இந்த வரவேற்பிற்கு தமிழக அரசியல்வாதிகள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், புதுச்சேரி மாநில ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவகார்த்திகேயன், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அனைத்து பிரபலங்களும் பங்கேற்று கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் அதிலும் குறிப்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்கள்.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இருந்து வருகிறது இந்த சூழ்நிலையில் அதிமுகவை சார்ந்த யாரும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை அது தொடர்பான புகைப்படங்களும் கிடைக்கப் பெறவில்லை ஆனால் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கே என் நேரு துரைமுருகன் ஏவா வேலு உள்ளிட்ட திமுகவின் முக்கிய பிரமுகர்கள் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பது சந்தேகத்தை கிளப்பியது.

அதேநேரம் நேற்றைய தினம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார் இது மருத்துவர் ராமதாஸ் அவர்களின் அறிவுரைப்படி நடந்தது என்று வெளியில் சொன்னாலும்கூட இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று இருப்பது சந்தேகத்தை தூண்டுகிறது. அதேசமயம் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டார் என்று சொன்னாலும் கூட அதிமுகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது தான் சூட்சமம்.

ஒருவேளை இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுகவிற்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும், இடையில் இரகசிய உடன்பாடு ஏதாவது ஏற்பட்டதா? அதன் காரணமாக தான் இந்த கூட்டணி முறிவு நடந்ததா? என்ற சந்தேகமும் எழுகிறது. அப்படி ஒருவேளை ஏதாவது நடந்திருந்தால் நிச்சயமாக மிக விரைவில் பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பும் உள்ளது.முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார். அதை மனதில் வைத்துதான் அவர் அரசியல் அரங்கில் ஒவ்வொரு காயையும் நகர்த்தி வருகிறார் என்பதில் ஐயமில்லை. அவருடைய அரசியல் சித்து விளையாட்டில் இதுவும் ஒன்றாக இருக்குமோ என்றும் கூட யோசிக்கத் தோன்றுகிறது.

ஏனென்றால் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு பலமான அறிமுகம் எதுவும் இல்லாமல் அந்த கட்சி தேர்தலை சந்தித்தது. அப்போது இந்த தேர்தலில் நிச்சயமாக அதிமுக காணாமல் போய்விடும் என்ற கருத்து தான் தமிழகம் முழுவதும் பரவலாக இருந்து வந்தது.ஆனால் அதிமுக பலமான எதிர்க்கட்சியாக சட்டசபை குறைந்தது அப்படி அதிமுக சட்டசபைக்குள் பலமான எதிர்க்கட்சியாக நுழைந்ததற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சி தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படி பலம் வாய்ந்த ஒரு கட்சி அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பது நமக்கு எப்போதுமே தலைவலி தான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கருதியதாக சொல்லப்படுகிறது.

ஆகவே தான் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் ரகசிய உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதன் காரணமாக தான் இந்த கூட்டணி முறிந்தது என்றும் ஒரு சிலர் கூறுகிறார்கள்.

Previous articleஅதிமுக பாமக கூட்டணி முறிவு! உண்மையான காரணம் இதோ!
Next articleலஞ்ச ஒழிப்பு சோதனையின் திக் திக் நிமிடங்கள்! இதன் பின்னணியில் இருப்பது யார்? கதிகலங்கும் அதிமுக தலைமை!