தமிழக அரசை பாராட்டிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்! உற்சாகத்தில் உடன்பிறப்புகள் 

0
158
Anbumani Ramadoss
Anbumani Ramadoss

தமிழக அரசை பாராட்டிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்! உற்சாகத்தில் உடன்பிறப்புகள்

சென்னையில் விரைவுபடுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்திய தமிழக அரசுக்கு பாமக தலைவைர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ”சென்னையில் 108 அவசர ஊர்திகள், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி நேரம் 7 நிமிடமாக குறைந்துள்ளது. அதாவது, ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் அவசர ஊர்தி சராசரியாக அடுத்த 7 நிமிடங்களில் நோயாளியை சென்றடைகிறது. இது பாராட்டத்தக்கது.

நோயாளிகள், விபத்துகளில் சிக்கியவர்களின் உயிரைக் காக்க உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். அதற்காகத் தான் எனது பதவிக் காலத்தில் 108 சேவையை தொடங்கினேன். சென்னையில் அவசர ஊர்தி வந்து சேரும் நேரம் 8.40 நிமிடத்திலிருந்து 7 நிமிடமாக குறைக்கப்பட்டிருப்பதால் பலரின் உயிர்கள் காப்பாற்றப்படும்.

நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் 108 அவசர ஊர்திகளின் சேவையை விரைவுபடுத்த வேண்டியது அவசியம் ஆகும். கிராமங்களில் அவசர ஊர்தி வந்து சேரும் நேரம் சில இடங்களில் 10 நிமிடம் முதல் 30 நிமிடங்களாக ( சராசரி 15 நிமிடங்கள்) உள்ளது. இது மேலும் குறைக்கப்பட வேண்டும்.

 

கிராமப்பகுதிகளில் அவசர ஊர்தி வந்து சேரும் சராசரி நேரத்தை 10 நிமிடமாக குறைக்க வேண்டும். அதற்காக அவசர ஊர்திகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அவசர ஊர்திகள் நிறுத்தி வைக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Previous articleபொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பிறகு விக்ரம்மின் அடுத்த படம்… ஷூட்டிங் எப்போது?… வெளியான தகவல்!
Next articleசாலையில் சடலம் எரிப்பு: அரியலூரில் நடக்கும் அவலம்! மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?