சோழர் கால பாசன திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுச்சி நடைப்பயணம்!
பாமக கட்சித் தலைவராக அன்புமணி பொறுப்பேற்ற பிறகு கட்சியின் வளர்சிக்காக பல்வேறு செயல்திட்டங்களை வகுத்துள்ளார். அந்த வகையில் தற்போது மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள கட்சியினர் மற்றும் பொதுமக்களை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின் போது மக்களின் குறைகளை கேட்கும் வகையில் 2.0 என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறினார்.
அந்த வகையில் இவர் தமிழகத்தின் முக்கிய பகுதிகளான சேலம் மற்றும் கோயம்பத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று குடிநீர் பிரச்சனை, உபரி நீர் திட்டம், அத்திக்கடவு செயல்படும் திட்டம், தென்பெண்ணை ஆறு இணைக்கும் திட்டம் என அனைத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களின் வளர்ச்சிக்காகவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகத்தில் மக்களுக்கு உள்ள தேவைகளை நிறைவேற்றும் வகையில் இத்திட்டம் காணப்படும். அந்த வரிசையில் தற்போது அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசன கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி அந்த மாவட்டத்திலும், காட்டுமன்னார்கோயில் பகுதியிலும் இன்று மற்றும் நாளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அந்த மாவட்டத்திலும், காட்டுமன்னார்கோயில் பகுதியிலும் இன்றும் நாளையும் எழுச்சி நடைபயணம் மேற்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்
அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அந்த மாவட்டத்திலும், காட்டுமன்னார்கோயில் பகுதியிலும் இன்றும் நாளையும் எழுச்சி நடைபயணம் மேற்கொள்கிறேன்.#Anbumani4WaterManagement pic.twitter.com/1E4BohsXfO
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) October 29, 2022