புதிய கல்வி கொள்கை கருத்தில் நடிகர் சூர்யாவை ஆதரிக்கும் அன்புமணி ராமதாஸ்

0
222

புதிய கல்வி கொள்கை கருத்தில் நடிகர் சூர்யாவை ஆதரிக்கும் அன்புமணி ராமதாஸ்

புதிய கல்வி கொள்கை கருத்து இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என நடிகர் சூர்யாவை சுட்டிக்காட்டி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 

பாமகவின் 31வது ஆண்டு விழாவை முன்னிட்டு தியாகராய நகரில் உள்ள பாமகவின் கட்சி அலுவலகத்தில் பாமக கொடியை அன்புமணி ராமதாஸ் ஏற்றி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமகவால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவே மாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மக்களுக்காக பாமக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அவர் அப்போது கூறினார். அஞ்சல் துறை தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும் எனவும், தமிழை தவிர்த்துவிட்டு நடத்தப்பட்ட இந்த தேர்வு மீண்டும் நடத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.  

புதிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக ஆய்வு செய்ய பாமக குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும், அந்த குழுவின் அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம் அளிப்போம் எனவும் அவர் கூறினார். மேலும் நீட், எக்சிட் போன்ற தேர்வுகள் எல்லாம் தனியார் பயிற்சி மையம் உருவாகவே வழிவகுக்கும் என்றும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Previous articleநடிகர் சூர்யாவுடன் இணைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்! கலக்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள்
Next articleஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென்று ஸ்டாலின் வலியுறுத்தல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here