PMK: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையே மோதல் போக்கானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கட்சியை உருவாக்கி தற்போது நிலை நிறுத்தி இருப்பது ராமதாஸான தனது அப்பா தான் என்பதை கூட மறந்து தலைமை பதவிக்கு அன்புமணி போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார். அதிலும் அவருடன் பல்லாண்டு காலம் துணை நின்ற நிர்வாகிகள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கவும் செய்கிறார். இதனையெல்லாம் பொறுக்க முடியாமல் தான் தற்போது அன்புமணியை தலைமை நிர்வாக குழுவிலிருந்து ராமதாஸ் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
முன்பிருந்த நிர்வாக குழுவை கலைத்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜிகே மணி அருள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம் ராமதாஸ் கட்சியின் முழு பவரையும் தன் வசப்படுத்த உள்ளது தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து கட்சி சார்ந்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. இது ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை அன்புமணி உடையது என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ராமதாஸ் கட்சி அதிகாரத்தை முழுமையாக தன் வசம் கொண்டு வந்து முக்கிய பொறுப்புகளில் மகள் வழி பேரனான முகுந்தனை நிலை நிறுத்துவதாக கூறுகின்றனர். இது குறித்து தான் நேற்று தைலாபுரத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. தற்போது கட்சித் தலைமை நிர்வாக குழுவிலிருந்து அன்புமணியை நீக்கியுள்ளது அரசியல் களத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.