PMK: பாமகவின் அப்பா மகன் இருவருக்கும் உள்ள மோதல் போக்கானது மேடை போட்டு பேசும் அளவிற்கு வந்துவிட்டது. பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் வழி பேரன் கட்சிக்குள் நுழைத்து பொறுப்பு கொடுத்தது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் மூலதனம். அதிலும் அன்புமணியின் பழைய போஸ்டிங்கான இளைஞரணி பதவியையே தனது பேரனுக்கு தூக்கி கொடுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பொது நிகழ்ச்சி ஒன்றில் இது ரீதியாக இருவரும் மேடையிலேயே சண்டை போட்டுக் கொண்டனர்.
அப்போது ராமதாஸ், இது நான் உருவாக்கிய கட்சி நான் சொல்வது தான் கேட்க வேண்டும் விருப்பம் இல்லாதவர்கள் கட்சியை விட்டு விலகிக் கொள்ளுங்கள் என தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறியது, அன்புமணிக்கு தான் என்பது அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். இவரும் அவகேற்றார் போல், பனையூரில் அலுவலகம் திறந்து விட்டேன் யாராக இருந்தாலும் என்னை அங்கு வந்து சந்தியுங்கள் என்று கூறினார்.
இவர்கள் மோதல் போக்கை ஒரு சில தினங்களிலேயே சமாதானம் செய்து வைத்தனர். இப்படி கட்சி சுமுகமாக சென்ற நிலையில், திடீரென்று ராமதாஸ் அன்புமணி-க்கு செயலாளர் பதவி கொடுத்துவிட்டு தலைமை பதிவியை தானே ஏற்று நடப்பதாக தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் இவர்கள் மோதல் போக்கும் மீண்டும் தொடர்ந்து விட்டதாக தெரிந்தது.
மேற்கொண்டு இது ரீதியாக என்னை யாரும் பார்க்க வேண்டாம் என்றும் கூறிவிட்டார். ஒரு சில தினங்கள் மௌனம் காத்த அன்புமணி, நான்தான் தலைவர், கட்சி ரீதியான அனைத்து செயல்பாடுகளையும் ஐய்யா ராமதாஸுக்கு புகழ் சேரும் வகையில் பார்க்கப் போகிறேன் என கூறினார். இப்படி இருவரும் தலைவர் பதவிக்கு மாறி மாறி அறிக்கை வெளியிட்ட நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சித்திரை முழு நிலா மாநாட்டில் ஏதேனும் மாற்றம் வந்துவிடுமா என அனைத்து தொண்டர்களும் எதிர்பார்த்தனர்.
அந்த வகையில் இன்று இது குறித்து அறிக்கை ஒன்றை ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பாக அன்புமணியை சித்திரை முழு நிலா மாநாட்டின் தலைவராக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.