சுஷாந்த்தை தொடர்ந்து 24 வயதே ஆன இளம் பிரபலம் தற்கொலை!! அதிர்ச்சியில் உடைந்த  திரையுலகம்!

Photo of author

By Parthipan K

அண்மையில் சுஷாந்த் சிங் வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்தால் மன அழுத்தத்தால் தன் வீட்டிலே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக அவரது தந்தை போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் சிபிசிஐடிகள் இந்த வழக்கை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத திரை உலகம் தற்பொழுது 24 வயதே ஆன தொகுப்பாளர் ஜெனிதா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.குடும்பத்துடன் ஒரே வீட்டில் அன்பான அம்மா அப்பா தங்கை ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்த ஜெனிதா, தன்னுடைய அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். மேலும் இந்த தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரணையில் இறங்கியுள்ளனர் போலீசார். இவரது தற்கொலை குறித்து எந்த ஒரு கடிதமும் கிடைக்கவில்லை.

அண்மையில் இவர் பாடகர் கைலாஷ் பேட்டி எடுத்திருக்கிறார். அந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி இருந்தது.

எனவே ஜெனிதா மன அழுத்தத்தினால் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி வருகின்றனர்.