அடங்கப்பா கோல்டன் விசாக்களை அள்ளும் பிரபலங்கள்! இதனால் இத்தனை சலுகைகளா!

Photo of author

By CineDesk

அடங்கப்பா கோல்டன் விசாக்களை அள்ளும் பிரபலங்கள்! இதனால் இத்தனை சலுகைகளா!

CineDesk

அடங்கப்பா கோல்டன் விசாக்களை அள்ளும் பிரபலங்கள்! இதனால் இத்தனை சலுகைகளா! 

ஐக்கிய அரபு அமீரக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனங்களை கௌரவிக்க கோல்டன் வீசா வழங்கி வருகிறது. 2019ஆம் ஆண்டு ஐக்கிய அரபி அமீரக அரசால் கோல்டன் வீசா வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரத்தின் குடிமகனாக கருதப்படுவார்கள். சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி தொழில் முனைவோர் முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலில் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாக்களை வழங்குகிறது.

வெளிநாடுகளில் தொழில் தொடங்கும் இந்தியர்களின் 30% தேர்ந்தெடுக்கும் அயல்நாடாக ஐக்கிய அரபு அமீரகம் அமைந்துள்ளது. இதே போல் ஊக்கப்படுத்தும் வகையில் கோல்டன் பீசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும், தங்களது நாட்டை பன்முகத்தன்மை கொண்ட நாடாக மாற்றும் முயற்சியாக இந்த கோல்டன் விசா திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அண்மையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசனுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசின் கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது. அதைத்தொடர்ந்து தற்போது நடிகர் சிம்புவிற்கு கோல்டன் வீசா வழங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் செல்லும்படியாகும் இந்த விசா மூலம் பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.

இந்த கோல்டன் வீசா ஆனது பத்து ஆண்டுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கவும், தொழில் செய்யவும், பணிபுரியவும் வாய்ப்பு வழங்குகிறது. 10 ஆண்டு காலம் முடிந்த பின்னர் இதை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். வழக்கமான விசா நடைமுறையில் பின்பற்றப்படும் ஸ்பான்சர் கோல்டன் வீசாவில் அவசியமில்லை.

இத்தகைய பல்வேறு சலுகைகளை கொண்ட கோல்டன் விசாவை பெற்ற முதல் நடிகர் என்ற பெருமையை நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பெற்றார். அவரை தொடர்ந்து விஜய் சேதுபதி, திரிஷா, இயக்குனர் வெங்கட் பிரபு, மீனா, சிம்பு உள்ளிட்டோருக்கும்  வரும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது இதே போல் மலையாள திரையுலகில் மம்மூட்டி, மோகன்லால், பிரித்திவிராஜ் உள்ளிட்டோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.