விபத்தில் உயிரிழந்த தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிக்கு நிவாரண தொகையாக ஆந்திர அரசு அறிவித்த 50 லட்சம்!
நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் காட்டேரி பகுதியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவ விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 11 ராணுவ வீரர்கள் அந்த இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
அதன் காரணமாக உடல் எரிந்த நிலையில் இருந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மற்றும் முப்படை தளபதியின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் ஆகியோரின் உடல்கள் முதலில் அடையாளம் காணப்பட்டது. அவர்களது இறுதிச் சடங்குகள் முழு ராணுவ அரசு மரியாதையுடன் நேற்று நடைபெற்றன. அதேசமயம் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை இன்னமும் அடையாளம் காணும் வழிமுறைகளை டெல்லி ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர்.
அந்த கோர விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் டி.என்.ஏ பரிசோதனை மூலம் தான் யார் யார் என்று தெரியும் அளவிற்கு அந்த கோர விபத்து நடைபெற்றது. அந்த விபத்தில் உயிரழந்த கமாண்டோ வீரர்கள் சாய் தேஜா மற்றும் விவேக் குமார் ஆகியோரின் உடல்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதை தொடர்ந்து மேலும் இருவரது உடல்களும் அடையாளம் தெரிந்த நிலையில் இன்று காலை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இதை ஏ.என்.ஐ செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது தொடர்பான விசாரணைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இருவரது உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் அது சற்று ஆறுதலை அளித்துள்ளது என்றும் தெரிவிக்கின்றனர். அதன்படி இந்த இருவரது இறுதிச் சடங்குகளும் முழு அரசு ராணுவ மரியாதையுடன் இன்று நடைபெற உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
எனவே தற்போது அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி 50 லட்சம் நிவாரண தொகையாக அறிவித்துள்ளார். ஆந்திர முதல் மந்திரியின் அலுவலகம் இதை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லான்ஸ் நாயக் பி சாய் தேஜாவின் குடும்பத்திற்கு ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்த சாய் தேஜா அவர்கள் முப்படைத்தளபதி பிபின் ராவத் அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிவர் என்றும் தெரிவித்துள்ளது.
https://twitter.com/AndhraPradeshCM?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1469527898570649605%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FIndia%2F2021%2F12%2F11123551%2FCM-Sri-ysjagan-has-announced-Rs-50-lac-exgratia-to.vpf